திருச்சி: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்- போக்குவரத்து துண்டிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

துறையூர்: திருச்சி துறையூரில் உள்ள கானப்பாடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

திருச்சி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் துறையூர் கானப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நம்மியந்தல்- ஒட்டம்பட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Bridge in Trichy washed out of flood in river

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு கானப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A bridge which connects Nammiyanthal and Ottampatti in Trichy washout fro flood in Kanapadi river. People are affected on this.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற