கோவையில் பயங்கரம்... அண்ணனை மிதித்து கொன்ற தங்கை கைது

கோவையில் படுத்த படுக்கையாக இருந்த அண்ணனை குடும்பத் தகராறில் அவரது தங்கை காலால் மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் படுத்த படுகையாக இருந்த அண்ணனை மிதித்து கொன்ற தங்கையை போலீஸார் கைது செய்தனர். .

கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு செல்வராஜ் (32), என்ற மகனும், நாகலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர். தங்கவேல் இறந்து விட்டார்.

Brother murdered in Coimbatore: Police arrested sister

செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். இதனால் ரேணுகா கட்டட வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இன்று காலை

வழக்கம் போல் இன்று காலை ரேணுகா வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது செல்வராஜுக்கும், தங்கை நாகலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாகலட்சுமியை, செல்வராஜ் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி படுத்தப்படுக்கையாக இருந்த செல்வராஜின் மார்பு பகுதியில் மிதித்தார்.

அவரது வலி தாங்க முடியாமல் அலறினார். இவரது சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். அதற்குள் நாகலட்சுமி தப்பிஓடிவிட்டார்.

தகவலறிந்த செல்வுபுரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்த போது நாகராஜ் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அண்ணனை மிதித்து கொன்ற நாகலட்சுமியை போலீஸார் தேடினர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய நாகலட்சுமியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்வதும் இது தொடர்பான பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வராஜை கொலை செய்ததும் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+