மதுக்கடைக்கு எதிராக போராடினால் மண்டை உடைப்பு- கன்னத்தில் அறை- தடியடி... இதுதான் ஜனநாயகமா?
மதுக்கடைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது கொடூரமாக தடியடி நடத்தி பெண்களை அறைந்து தாக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: மதுக்கடையை குடியிருப்பில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கன்னத்தில் அறைந்து தாக்கிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் மதுகடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சரிபாதை மதுபான கடைகளை மூட வேண்டிய நிலை உருவானது.
மதுபான கடை வருவாயை மலையென நம்பியிருக்கும் தமிழக அரசு விழிபிதுங்கிக் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபான கடைகளை திறப்பதில் படுமும்முரமாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள்
ஆனால் பொதுமக்களோ உயிரே போனாலும் எமனாக இருக்கும் மதுபான கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என திரும்பிய திசையெங்கும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களின் ஒருபகுதிதான் திருப்பூர் சாமளாபுரத்தில் இன்று நடைபெற்றது.

தொடர் போராட்டம்
எங்கள் குடியிருப்புக்குள் எந்த ஒரு மதுபான கடையையும் அமைக்க விடமாட்டோம் என காலைமுதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.

போலீஸ் குவிப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையில் போராட்டம் நடந்த இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது. பொதுமக்களை கலைந்து போக சொல்லியும் போராட்டத்தை பொதுமக்கள் கைவிடவில்லை.

தடியடி மண்டை உடைப்பு
இதையடுத்து மிருகத்தனமாக போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக ஓடியது. பத்திரிகையாளர்களையும் போலீசாரின் லத்திகள் விட்டுவைக்கவில்லை.

கன்னத்தில் அறைந்த போலீஸ்
இதில் உச்சகட்டமாக கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன், பெண் ஒருவரது கன்னத்தில் பளார் என அறைந்தது அனைவரையும் பதைபதைக்க வைத்தது. கொள்ளையடித்தவர்கள், கூட்டு களவானிகள் எல்லாம் கொலுபொம்மைகளாக அரசாங்கத்தில் உலாவர, உரிமைக்கு போராடினால் பொதுமக்களுக்கு இதுதான் தண்டனையா?

அரச பயங்கரவாதமே
இது அப்பட்டமான அரச பயங்கரவாதம்... அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications