இலங்கையில் புத்தமத குருக்கள் சமூக விரோதிகளை ஏவி முஸ்லீம்களை கொல்கின்றனர்: தா.பா.
சென்னை: இலங்கையில் புத்தமத குருக்கள் சமூக விரோதிகளை ஏவி இஸ்லாமிய மக்களை கொன்றழிக்கத் தொடங்கியுள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த அலுத்தகமா என்னும் இடத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்களின் மீது மிகவும் கடுமயான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர்கள் சிங்கள இனவெறி அரசியலை அடிப்படையாக கொண்ட ஆளும் கட்சியை சார்ந்தவாகள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது. இதில் ராஜபக்சே அரசுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் கொல்லப்பட்டுளளார்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

இலங்கையில் புத்தமத குருக்கள் சமூக விரோதிகளை ஏவி இஸ்லாமிய மக்களை கொன்றழிக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மையினரோடு சின்ன சிறுபிரச்சனைகளை உருவாக்கி, அதில் சிங்கள காடையர்களை கொண்டு, தாக்குத்தல் தொடுக்கும் வழக்கத்தை இலங்கை கொண்டுள்ளது. 1956, 1983 ஆண்டுகளில் இலங்கையில் வெகுமக்களின் மீது நடந்த தாக்குதலை இதற்கு உதாரணமகக் கூற முடியும்.
இலங்கை அரசு எந்தப் பிரச்சனையையும் அறிவுப்பூர்வமாக அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு பதிலாக இன அழிப்பின் மூலம் தீர்த்துக்கட்ட முயற்சிப்பது தெளிவாகி வருகிறது.
முள்ளிவாய்கால் படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் விசாரணை தொடங்குவதாக அறிவித்துள்ள இன்றைய சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த வன்செயலை இந்தியக் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கைவாழ் மக்களின் மனித உரிமைகளை சாதி, மத வேறுபாடு இல்லாமல் குடிமக்களாக கருதி, குடியாட்சி நடத்த வைக்க, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பில் வற்புறுத்துகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications