ஏழைகள், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் பட்ஜெட்: மோடி
சென்னை: இந்த பட்ஜெட் சாதாரண மக்களின் வாழ்க்கை மாறும். விவசாயிகள், பெண்கள், கிராமப்புற மக்களின் முன்னேற்றத்தை மையமாக கொண்ட பட்ஜெட் இது. என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2016-17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்று கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள், பெண்கள், கிராமப்புற முன்னேற்றத்தை மையமாக கொண்ட பட்ஜெட் என மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் ஏழைகள், நலிவடைந்த பிரிவினரை மேம்படுத்தும் திட்டங்கள் கொண்ட பட்ஜெட் எனவும், சொந்த வீடு வாங்குபவர்களுக்கு ஊக்கம் தரும் பட்ஜெட் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
விவசாயிகளை முக்கிய இலக்காக கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், 2022-க்குள் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்த பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் பாராட்டியுள்ளார்.
மேலும் 5 கோடி கிராமப்புற குடும்பங்கள் விறகு அடுப்பில் இருந்து விடுதலை பெறும் என்றும், 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். சாதாரண மனிதர்களின் வாழக்கை தரம் மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
2018ம் ஆண்டில் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்று கிராமப்புற பொருளாதாரம் மாறும். வருகிற 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது முக்கியமான நடவடிக்கை. கட்டமைப்பு துறைக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கியது முக்கியமானது என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications