ராமேஸ்வரம் கோவில் மதில் சுவரை மறைக்கும் கட்டிடங்கள்... இடிக்க வலியுறுத்தும் சிஆர்பிஎப்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: பாதுகாப்பு கருதி ராமேசுவரம் கோவிலின் 4 ரத வீதிகளின் கோவிலின் மதில் சுவர்களையும் மறைத்துள்ள கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களையும் விரைவில் இடிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசாமி கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வருவதால், கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்குப் பின்னரே பக்தர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Buildings around Rameswaram temple to be demolished?

இந்நிலையில், ராமேஸ்வரம் கோவில் பாதுகாப்பு பணிகளை நேரில் பார்வையிட, மத்திய அரசின் மத்திய பாதுகாப்பு படையின் துணை ஆணையர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு கட்ந்தமாதம் அங்கு சென்றனர்.

கடந்த மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் அக்குழு கோவிலில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, கோவிலின் உள்பகுதியில் 28 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், கோவிலின் மதில் சுவர்களை மறைத்து கட்டப்பட்டு இருந்த கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி, தனியார் தங்கும் விடுதிகள், வீடுகள் என அனைத்து கட்டிடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கோவில் மதில் சுவர்களை மறைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதால் கோவிலின் மேல் தளம் வழியாக தீவிரவாதிகள் கோவிலின் உள்ளே சென்று விடும் ஆபத்து இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதனால், கோவிலின் 4 ரத வீதிகளிலும் மதில் சுவர்களை மறைத்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் அதிகாரிகளிடம் அக்குழு வலியுறுத்தியது.

மேலும், கோவில் பணியாளர்களும், யாத்திரை பணியாளர்களும் அடையாள அட்டை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி அவசர காலத்தில் பாதுகாப்பு படை ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் வகையில் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளதா? எனவும் பாதுகாப்பு படையினர் கோவில் அதிகாரிகளின் விசாரித்தனர். ஆனால் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் தளங்கள் எதுவும் கிடையாது. மண்டபம் முகாம், உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளது என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் பாதுகாப்புப் படைக் குழுவினரின் இந்த 3 நாள் ஆய்வு மூலம் விரைவில் ராமேசுவரம் கோவிலில் மத்திய பாதுகாப்பு படையோ அல்லது மத்திய கமாண்டோ படையோ பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், கோவிலின் 4 ரத வீதிகளின் கோவிலின் மதில் சுவர்களையும் மறைத்துள்ள கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களையும் விரைவில் இடிக்குமாறு மத்திய அரசு மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வு தொடர்பாக ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், "ராமேஸ்வரம் கோவிலின் பாதுகாப்பை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்பு படையினர் கோவிலின் மதில் சுவர்களை மறைத்துள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால் கோவிலின் ரத வீதிகளில் பட்டா நிலத்தில் வசிப்பவர்களை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

தனியார் கட்டிடங்களை அகற்றுவது குறித்து கோவில் நிர்வாகம் எதுவும் முடிவு செய்ய முடியாது. ஆனால் கோவிலின் மதில் சுவரை மறைத்து கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களும் அரசு அனுமதி கிடைத்த பின்பு இடிக்கப்படும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+