அண்ணன் இப்போ டாப்புக்குப் போய்ட்டேன்.. நானா சிக்கினா உண்டு.. "அஞ்சான் புல்லட்"டின் அதிரடி ஆடியோ!
Recommended Video

தேனி: கைது செய்யப்பட்டுள்ள புல்லட் நாகராஜன் வெளியிட்ட 3வது வாட்ஸ் ஆப் ஆடியோவில் மேலும் சில பரபரப்புகளைக் கொடுத்து விட்டே கைதாகியுள்ளார்.
யார் இந்த புல்லட் என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடந்த சில நாட்களாக சிரிக்க வைத்து விட்டார் புல்லட் நாகராஜன். அவரது பேச்சு தொனி, பேசிய பேச்சு யார்ரா இது செம காமெடியா இருக்கே என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் நான் சீரியஸா பேசிட்டிருக்கேன் என்ற ரீதியில் அடுத்தடுத்து வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்டு கலகலப்பைக் கூட்டினார் புல்லட். இன்று அவரை ஒரு வழியாக போலீஸ் கைது செய்து விட்டது. இந்த நிலையில் புல்லட் வெளியிட்ட 3வது ஆடியோவில் இடம் பெற்றுள்ள விவரம்:

கலெக்டருக்கு மிரட்டல்
புல்லட் நாகராஜன் வெளியிட்ட 3வது ஆடியோவில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆகியோரை மிரட்டியிருந்தார். அவர்களை முட்டாள் என்றும் வர்ணித்திருந்தார். புல்லட்டின் பேச்சிலிருந்து: நீங்கதான் பெரிய அறிவாளினு நெனச்சீங்கன்னா உங்கள மாதிரி ஃபூல் முட்டாள் யாருமே கிடையாது.

நீங்கதான் ரேப் பண்றீங்க
பொம்பளைங்கள கணக்கு வழக்கில்லாமல் ரேப் பன்றது நீங்கள்தான். நான் நெனச்சேன்னா எஸ்பியையும் கலெக்டரையுமே மாத்தறவன். இப்போ பல்தேவ்னு ஒரு அம்மா வந்து என்னத்த கிழிச்சிருக்காங்க. ஒன்னுமில்லே...

பேர் வைக்க என்ன அதிகாரம்
எனக்கு புல்லட் நாகராஜன்னு பட்டப் பெயர் வக்கறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் கொலை மிரட்டல் விடுக்கறதா சொல்லிறீங்களே. எங்க அண்ணனை நாயை அடிக்கிறாப்ல் பொனத்த அடிக்கிறாப்ல அடிச்சி அனுப்பியிருக்காங்களே. எங்கள் அண்ணனை மட்டும் இல்லை. இன்னும் எத்தனையோ கைதிகளையும் அடிக்கிறீங்க.

ஊர்மிளாவுக்கு என்ன பவர்
சிறைவாசிகள்னே சொல்லக் கூடாதுனு டிஜிபி நடராஜன் சொல்லியிருக்காரு. எனவே அவர்களை இல்லவாசிகள்னு சொல்லனும். அப்படி நவீன காலமாக இருங்கள். ஊர்மிளாவுக்கு சூப்பிரண்ட்டா இருக்க என்ன பவர் இருக்கிறது? என்ன ஸ்டேடஸ் இருக்கு? என்னை பொருத்த அளவுக்கு டாக்டர் காத்திருக்கலாம் ( சிறையில் புல்லட்டின் அண்ணனை பரிசோதித்த டாக்டரை சொல்கிறார்). ஆனால் பேஷன்ட் காத்திருந்தால் உயிர் போயிடும்.

ஊசி போடச் சொன்னா அடியா
எங்கண்ணன் என்ன சொல்லியிருக்கான், ஊசிதானே போட சொல்லியிருக்கான், அதுக்கு போட முடியாதுனு சொல்லியிருக்க வேண்டியதுதானே. அடிக்கறது உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. நீங்கள் சொல்லித்தான் அடிச்சாங்க.

ஜெயிலுக்கு போய்ருவீங்க
வழக்கறிஞர்கள் பூராம் நன்றியுள்ளவர்கள். நான் வழக்கறிஞர் ஜாதி, ஜட்ஜ்ன்றது அப்பறம். நான் சட்டத்தை ஃபிங்கர் டிப்பல வச்சிருக்கேன். எங்கப்பா மிலிட்டரி ஆபிசர், கோர்ட்டில் உத்தரவு வாங்காமல் எங்க வீட்ட சர்ச் செய்தீங்கன்னா, அம்புட்டு பேரும் ஜெயிலுக்கு போறது உறுதி.

அண்ணன் டாப்புக்கு போயிட்டேன்
அண்ணன் இப்போ எங்கேயோ போய்ட்டேன் டாப் லெவலுக்கு. என்னோட முடியை கூட உங்களால கண்டுபிடிக்க முடியாது. நீ வேர்ல்டு பூரா தேடினாலும் உங்களால என்னை தொட முடியாது. நானா இஷ்டப்பட்டா தான் வருவேன். பெரியகுளம் வழக்கறிஞர்கள் இவர்களை சும்மா விடாதீங்க... கைதிகளை எல்லாம் கொலை பன்றாங்க... எனக்கே ஊசி போட்டிருக்காங்க.

கொலை மிரட்டல் விடுக்கலை
மதுரை ஜெயில்ல வர ஆளுகளை பூராம் என்னால களையெடுக்க முடியாது. நான் சட்டம் படிச்சவன், நான் எப்படி கொலை பன்னுவேன் சொல்லுவேன். தண்டிக்கலாம், ஆனால் கோர்ட்ல வச்சி தண்டிக்கலாம். இந்த நாகராஜுக்கு இன்னொரு கோர்ட் இருக்குனு சொன்னேனே தவிர அவிங்களுக்கு கொலை மிரட்டல் விடலை. நான் சொந்த மண்ணை விட்டு ஓடிட்டேன்னு தப்பு கணக்கு போட்றாதீங்க.

ஓகே டேக் கேர்!
நான் என்னை பாதுகாத்துகிட்டாதானே, உங்க எல்லாரும் ஆப்பு வக்க முடியும். இதுக்குமேல சொல்ல மாட்டேன். என் வீட்லயோ என் அண்ணனையே, எங்கம்மாவையோ, என் அண்ணன் மகளையோ கை வச்சா எந்த நேரத்துல வந்து என்னா செய்வேனு இந்த நாகராஜனுக்கு தி கிரேட் லீடிங் நாகராஜனுக்கு தெரியும் ஓகே, டேக் கேர் என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications