கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே குதித்து 60 கிலோ தங்கம் கொள்ளை.. பாளையங்கோட்டையில் பரபரப்பு
நகைக்கடையின் மேற்கூரையை இரவோடு இரவாக உடைத்து உள்ளே குதித்த மர்மநபர்கள் 60 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள அழகர் ஜூல்லரியின் மேற்கூரையை உடைத்து 60 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
பாளையங்கோட்டை முக்கிய தெருவில் அழகர் ஜூல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை முறையாக மூடிவிட்டு கடை ஊழியர்கள் சென்றனர்.

ஆனால் இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்தால் கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் மேற்கூரையை கொள்ளையர்கள் இரவோடு இரவாக உடைந்து உள்ளே நுழைந்து சுமார் 60 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின்னரே கொள்ளை போன தங்கத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்ற தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications