For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ்.. அதிர்ச்சியில் பேருந்து ஓட்டுநர் மரணம்

வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு வந்த நோட்டிஸை பார்த்த அரசு ஓட்டுநர் பேருந்து மரணம் அடைந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு வந்த நோட்டிஸை பார்த்த அரசு ஓட்டுநர் பேருந்து மரணம் அடைந்து இருக்கிறார். தேவராஜ் என்ற அரசு பேருந்து ஒட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார்.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள்.

Bus driver dies after seeing notice of TNSTC

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 7 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது.

இந்த நோட்டிஸை பார்த்த ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். நோட்டீஸை பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

மாரடைப்பு வந்தவுடன் இவரை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணம் அடைந்து இருக்கிறார்.

இவர் போக்குவரத்து துறையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்த ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bus strike continues for 7th day in Tamil Nadu. Bus strike makes huge problem to common people. TNSTC sent notice to workers seeking explanation on strike. Bus driver named Devaraj dies after seeing notice of TNSTC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X