அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து... திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூரிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை, ஓட்டுனர் கடலூர் மார்க்கத்தில் நிறுத்தியுள்ளார்.

அப்போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட ஓட்டுநர், பேருந்திலிருந்து கீழே இறங்கினர். புகை தீயாக மாறி, பேருந்து முழுவதும் மளமளவென எரிய தொடங்கியது.
இதை பார்த்த மக்கள், அலறி அடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அரசுப்பேருந்து தீ விபத்தை அடுத்து திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறவழிச்சாலை, ஸ்ரீரங்கம், பாலக்கரையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பேருந்து எரிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications