பரமக்குடியில் அதிகாலை பயங்கரம்.! பெங்களூர் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்தது.. பயணிகள் நிலை என்ன!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பேருந்து முழுமையாக எரிந்து நாசமான நிலையில், நல்வாய்ப்பாகப் பயணிகள் அனைவரும் சரியான நேரத்தில் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் விடுமுறை, தொடர்ந்து வீக் எண்ட் எனத் தொடர் விடுமுறையாக வந்ததால் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கலை கொண்டாடினர்.

இன்று ஞாயிறுடன் பொங்கல் விடுமுறை முடியும் நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்புகிறார்கள். சிலர் இன்றைய கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு நாள் முன்னதாக நேற்றைய தினமே சொந்த ஊர்களில் இருந்து கிளம்பிவிட்டனர். இதற்கிடையே நேற்றைய தினம் பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்தில் திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது. நள்ளிரவில் திடீரெனப் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட உடனேயே உள்ளே இருந்த 33 பயணிகளும் வெளியேறிவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற தனியார் படுக்கை வசதி கொண்ட பேருந்து தீ விபத்தில் சிக்கியுள்ளது.. பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான நிலையில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர்தப்பினர்.
தீவிபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே மானாமதுரை மற்றும் பரமக்குடியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், பேருந்து அதற்குள் முழுமையாக எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications