கர்நாடக பந்த் எதிரொலி: சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை 11.30 மணியிலிருந்து பஸ்கள் இயக்கம்
சென்னை: கர்நாடகா பந்த் காரணமாக, சென்னை-பெங்களூர் நடுவேயான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பஸ்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காலை 11.30 மணிக்குதான் பகல் நேர முதல் பஸ் கோயம்பேட்டில் இருந்து சென்னை நோக்கி கிளம்பியது.
கோவா-கர்நாடக மாநிலங்கள் நடுவே ஓடும் மகதாயி நதியில் இருந்து கலசா-பண்டூரி என இரு கால்வாய்களை அமைக்க கர்நாடகா முயலுகிறது. இதற்கு கோவா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதைக் கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும், கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல், பந்த் நடைபெறுகிறது. கன்னட ஆதரவு அமைப்புகள் அழைப்புவிடுத்த பந்த்துக்கு அரசு பஸ் கழகங்கள் முழு ஆதரவு அளித்துள்ளன.

எனவே பெங்களூரில் நகர பஸ்களும், வெளியூர் செல்லும் பஸ்களும் இயங்கவில்லை. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் இருந்து பெங்களூர் வந்த பஸ்கள் ஒசூர் எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் பெங்களூர் வரும் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு பகல் நேரத்திலும் அவ்வப்போது கர்நாடக மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் பஸ்கள் இயக்குவது வழக்கம். இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடக எல்லைக்குள் பஸ்கள் நுழைய முடியாது என்பதால், பஸ்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி சென்னை, கோயம்பேட்டில் இருந்து கர்நாடக அரசு பஸ்கள் காலை 11.30 மணிமுதல் புறப்பட தொடங்கியது. தமிழக அரசு பஸ்கள் 12 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து கிளம்பியது. ஆம்னி பஸ்கள், பகல் 2 மணி முதல் கிளம்புவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், மாலை 6 மணிக்கு மேல் இந்த பஸ்கள் கர்நாடக எல்லைக்குள் நுழையும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூர் நடுவேயான அரசு பஸ்களின் பயண நேரம் சுமார் 7 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பெங்களூரில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மாலை 6 மணிக்கு மேல்தான் பஸ்கள் கிளம்ப உள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications