Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தப்பட்டது எப்படி? பீதியை கிளப்பும் பரபரப்பு தகவல்கள்!

தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப.சிதம்பரம் உறவினர் கொலை..திடுக்கிடும் தகவல்கள்- வீடியோ

    திருப்பூர்: தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவன தொழிலதிபர் சிவமூர்த்தி கொலையயில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் சிவமூர்த்தி எப்படி கடத்தப்பட்டார்? எங்கு வைத்து கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தொழிலதிபர்

    தொழிலதிபர்

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியின் தங்கை மருமகன்தான் இந்த சிவமூர்த்தி. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    மேட்டுப்பாளையம் சென்றார்

    மேட்டுப்பாளையம் சென்றார்

    இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை தொழில் ரீதியான நண்பர்களுடன் சிவமூர்த்தி காரில் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது காரில் சென்ற மூன்று பேர் அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.

    தந்தை புகார்

    தந்தை புகார்

    அதற்கு சிவமூர்த்தி மறுக்கவே மூன்று பேரும் சேர்ந்து சிவமூர்த்தியை கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிவமூர்த்தி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை போலீஸில் புகார் அளித்தார்.

    போலீஸ்க்கு தகவல்

    போலீஸ்க்கு தகவல்

    அப்போதுதான் ஆம்பூர் டோல்கேட்டை சொகுசு கார் ஒன்று அடிக்கடி கடந்து செல்வதாக டோல்கேட் ஊழியர்கள் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் காரை கண்டுபிடித்த போலீசார் அதில் இருந்த கவுதம், மணிபாரதி, விமல் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    காரிலேயே வைத்து

    காரிலேயே வைத்து

    அப்போது திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து அவரது உடலை கெலவரப்பள்ளி அணையில் வீசியதாக தெரிவித்தனர். திங்கள் கிழமை கொலை செய்ததாகவும் உடலை எங்கு வீசுவது என்று தெரியால் 2 நாட்கள் காரிலேயே வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

    உடலை வீசிய இடம்

    உடலை வீசிய இடம்

    பின்னர் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் உடலை வீசிவிட்டு தப்பிப்பதற்காக வேலூருக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டும்படி கெலவரப்பள்ளி அணை பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    கொடூர கொலை

    கொடூர கொலை

    இந்நிலையில் இன்று காலை உடல் வீசப்பட்டதாக காட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிவமூர்த்தியின் உடல் மிதந்தது. கை கால்கள் கட்டப்பட்டு, முகம் மற்றும் உடல் முழுவதும் டேப் ஒட்டப்பட்டு மைல்கல்லுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

    மிதந்த உடல்

    மிதந்த உடல்

    உடல் மிதக்காமல் இருக்க மைல் கல்லை கட்டி வீசியதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் மைல் கல்லின் எடை குறைவாக இருந்ததால் உடல் மிதந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+