4 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு
Recommended Video
திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிக்கும், வரும் மே 19-ல் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய கொடுத்த அவகாசம் இன்றுடன் முடிந்துள்ளது.

ஆளுங்கட்சியான அதிமுக, நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 4 தொகுதிகளிலும் போட்டியிடும், அதிமுக வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோல் சூலூர் சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 3 தொகுதிகளிலும் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
4 தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. மே 2-ம் தேதி தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
மே 19-ம் தேதி 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது பதிவாகும் வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications