வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன் தாக்கு
கோவை:வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளும் ஒரு தலைவர்தான் வைகோ என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: விஜயகாந்தை பாஜக மயக்க பார்த்ததாக கூறும் வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் இல்ல திருமண விழாவுக்காக மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுக்க வந்த போது என்ன சொன்னார்.

வைகோவிடம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது என்றார். ஆனால் வைகோ அப்போது தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி என்றார். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக தி.மு.க. எனது கட்சியை அழிக்கப் பார்க்கிறது என கூறினார்.
இந்த 3 நாட்களுக்குள் வைகோவின் நிலை மாறியது எப்படி? அவரது இந்த சிந்தனை வளர்ச்சிக்கு காரணம் என்ன? என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் யாரிடத்திலோ விலைபோய் விட்டதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கூறுகிறேன்.
யாரிடத்திலோ பேரத்துக்கு அடிபணிந்து விட்டு இன்று பா.ஜனதாவை குற்றம் சாட்டுவதாக நினைத்து விஜயகாந்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முன்னிலைப்படுத்துவதால் வைகோவுக்கு ஏற்பட்டுள்ள பொறாமையின் வெளிப்பாடு தான் அவரது இந்த பேச்சு.
தன்னை கொள்கை வீரர் என கூறும் வைகோ திருச்சியில் தி.மு.க. கட்அவுட்டில் நின்று விட்டு அதே நேரம் அ.தி.மு.க.வுடன் தொகுதிகள் பேசி முடித்தார். இது தான் கொள்கையா? வைகோ இதுவரை வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? என விவாதிக்க தயாரா?
சொந்த கூட்டணி தலைவர் மீது பழி போடும் காழ்ப்புணர்வு மிக்க மனிதர் அவர். தன்னை தூய்மையான மகாத்மா காந்தி போல காட்டிக் கொள்ளும் வைகோ தனது கொள்கை நிலைப்பாட்டில் ஒரு போதும் உறுதியோடு இருந்தது இல்லை.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத கம்யூனிஸ்டுகள், சமூக மாற்றத்தை விரும்பாத வைகோ இவர்கள் இணைந்த இந்த கூட்டணி சிதறுண்டு போகும். எப்படி சாகித் அப்ரிடிக்கு இந்த உலக கோப்பை கடைசி இன்னிங்சோ அது போல விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தல் கடைசி இன்னிங்சாக இருக்கும்.
இந்த தேர்தலோடு விஜயகாந்த் அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டிய வழியை வைகோ காட்டி உள்ளார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய நடிகர் யார் என்று கேட்டால் சிவாஜி என குழந்தைக்கும் கூட தெரியும். ஆனால் அவரை விட வல்லமை படைத்த ஒரு நடிகர் என்றால் அது வைகோ தான் என்று அவர் கூறியுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications