வெளி மாநிலத்தில் இருந்தும் மிரட்டுகிறார்கள்.. கதறிய சி.ஆர்.சரஸ்வதி கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய தொலைபேசிக்கு ஏராளமானோர் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரே முதல்வராக பதவி ஏற்க காய் நகர்த்தி வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால். அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி அவரது மறைவிற்கு பின்னர் சசிகலாவின் ஆதரவாளராக மாறியுள்ளார்.

இந்நிலையில், சி.ஆர்.சரஸ்வதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், இரவு 10 மணிக்கு மேல் ஏராளமானோர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகின்றனர்.
மேலும், ஆபாசமாகவும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களிலிருந்து என்னை தொடர்பு கொண்டு திட்டுகிறார்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நான் பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசி வருகிறார்கள்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications