ஒருபக்கம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை.. மறுபக்கம் சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமாபாபு செல்பி.. தொண்டர்கள் ஷாக்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனை எதிரே அமர்ந்து கொண்டு செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர், அதிமுக நிர்வாகிகளான சி.ஆர்.சரஸ்வதியும், பாத்திமாபாபுவும்.
நடிகைகளான சி.ஆர்.சரஸ்வதி, அ.தி.மு.கவின் செய்தித்தொடர்பாளராகவும், பாத்திமாபாபு, தலைமை பேச்சாளராகவும் உள்ளனர். இவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க சென்றனர்.

இதன்பிறகு மருத்துவமனை வெளியே வந்து அமர்ந்து கொண்டு, செல்ஃபி எடுத்துள்ளனர். பாத்திமா பாபு செல்போனில் செல்ஃபி எடுக்கப்பட்டதை போல தெரிகிறது. சரஸ்வதி அதற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வார இதழ் ஒன்றின் போட்டோ கிராபரால் கிளிக் செய்யப்பட்டுவிட்டது.
அதிமுக தொண்டர்கள் எல்லோரும், ஜெயலலிதா குணமாக வேண்டி, கோயில், கோயிலாக வலம்வந்து வேண்டிவரும் நிலையில், இவ்விரு முக்கிய நிர்வாகிகள் ஜாலியாக செல்பி எடுத்துள்ளது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதா இதை கண்டுகொள்ளாமல் விடுவாரா, அல்லது, சீரியஸ்னஸ் இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்காக பதவியை பறிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications