ஓட்டுக்கு ரூ6,000... கரன்ஸி மழை கொட்டிய ஆர்.கே. நகரில் தேர்தல் பிரசாரம் பரபரப்புடன் ஓய்வு!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறவைடந்தது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. நாளை மறுநாள் டிசம்பர் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த மாதம் 27-ந் தேதி முதல் இம்மாதம் 4-ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டு 73 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னர் வேட்பு மனு பரிசீலனையில் 13 பேர் திரும்பப் பெற்றனர். இதனால் தற்போது ஆர்.கே.நகரில் மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

களத்தில் நிற்பது யார்?
அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், பாஜகவின் கரு.நாகராஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் உள்ளிட்டோர் முக்கியமான வேட்பாளர்கள்.

தலைவர்கள் பிரசாரம்
அதிமுகவின் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பிரசரம் செய்தனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷூக்கு ஆதரவாக ஸ்டாலின், வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து வீதி தோறும் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

பாஜக முகாம்
சுயேச்சை வேட்பாளர் தினகரனும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பாஜகவின் கரு. நாகராஜனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். இத்தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறவடைந்தது.

இறுதிநேர பரபரப்பு
கடைசி நிமிடங்களில் ஆர்கே நகர் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்றது. கருப்பு சட்டையுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அதேபோல் சுயேச்சை வேட்பாளர் தினகரனும் இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வெளியூர் நிர்வாகிகள் வெளியேற்றம்
இதன் பின்னர் வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications