ஆர்.கே.நகரில் நாளையுடன் பிரசாரம் முடிவடைகிறது- விஜயகாந்த் இன்று மாலை வாக்குசேகரிப்பு
ஆர்கே நகர் தொகுதியில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை ஆர்கே நகரில் பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. அத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை வாக்கு சேகரிக்க உள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு ரூ89 கோடி பணம் லஞ்சமாக கொடுத்த ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்தாகலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
இதனிடையே ஆர்கே நகரில் நாளை மாலையுடன் பிரசாரம் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை ஆர்கே நகர் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். வெளியூர் நபர்கள் நாளை மாலையில் இருந்து தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications