ஆளானப்பட்ட அமெரிக்காவுக்குள் நுழைந்த எபோலா: இந்தியா தடுத்து நிறுத்துமா?
சென்னை: அமெரிக்காவில் இரண்டு பேருக்கு எபோலா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியா எபோலாவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு தயார் நிலையில் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனை எபோலா வைரஸ் மிரட்டி வருகிறது. எபோலா தாக்கி இதுவரை 4 ஆயிரத்து 447 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் எபோலா காய்ச்சலுக்கு பலியான லைபீரியருக்கு சிகிச்சை அளித்த நர்ஸை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது.

அமெரிக்கா
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைவரையும் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை செய்தும் எபோலா அந்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது.

இந்தியா
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்திய விமான நிலையங்களிலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவரை எபோலா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களை வைரஸ் தாக்கவில்லை என்று தெரிய வந்தது.

தயாரா
இதே வேகத்தில் எபோலா பரவினால் அது விரைவில் பல நாடுகளை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எபோலாவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு நம் சுகாதாரத் துறை இல்லை என்று நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

நர்ஸுகள்
இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு நர்ஸும், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 10 நர்ஸுகளும் இருப்பதாக கடந்த 2010ம் ஆண்டில் உலக வங்கி தெரிவித்தது.

டெங்கு
இந்தியாவில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் இருப்பதால் எபோலாவின் துவக்க கால அறிகுறியை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

டாக்டர்களே
இந்தியாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும், நர்ஸுகளும் கையுறை அணியாமல் இருப்பது வைரஸ் வேகமாக பரவ உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications