"அரண்டு" போன எடப்பாடி.. பாஜக டீல் முடிஞ்சது போல.. வழிமேல் விழிவைத்த பன்னீர்.. டபுள் ட்விஸ்ட் இருக்கு
சென்னை: கர்நாடக தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அதிமுகவின் ஒவ்வொரு நகர்வையும் ஓபிஎஸ் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறதாம்..!!
நாளைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.. அநேகமாக கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது..
கர்நாடகத்தில் அதிமுகவுக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.. அதிலும் 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இதில், பெங்களூரு மாநகராட்சியில் அதிமுகவுக்கு 9 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.. இந்த ஆதரவுதான் பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது..

3 சீட்டுகள்: இப்போதைக்கு தென் மாநிலங்களில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான்.. அதனால், கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளதால், அதிமுகவின் ஆதரவை கேட்டு வருகிறது.. அதிலும் அதிமுக பெரும்பாலும், எடப்பாடியிடம் உள்ளதால், அவரிடமே அமித்ஷா பேசியதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுக்கு ஆதரவு தருவதை பற்றி எதுவுமே சொல்லாமல், அதிமுகவுக்கும் சீட் தரவேண்டும் என்று கேட்டு வருகிறார்.
பாஜகவினருக்கே சீட் கொடுக்க முடியாமல் திணறி வரும்நிலையில், அதிமுகவுக்கு சீட் எப்படி கொடுப்பது என்று மேலிடம் திகைத்தது.. எனவே, ஆதரவு மட்டுமே வேண்டும் என்று அதிமுகவிடம் சொல்லிவிட்டது.. பாஜக மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 210 தொகுதிக்கு வேட்பாளரை ஏற்கனவே அறிவித்திருந்தது... நேற்றிரவு 10 தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து விட்டது. அப்படியானால் மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.. ஆக, இதனால் அதிமுகவுக்கு சீட் இல்லை என்பது தற்போது உறுதியாகி விட்டது..
டெல்லி ஹைகோர்ட்: எனினும், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிட போவதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் அதிமுக வழக்கும் தொடர்ந்துள்ளது.. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தன்னுடைய முடிவை நாளை அறிவிக்க உள்ளது.. ஆனால் கர்நாடகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாளாகும்... அன்று தேர்தல் ஆணையம் தன்னுடைய முடிவை சொன்னாலும், அதிமுகவால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது... இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் உள்ளார்.

அதிமுகவில் இப்படியான விவகாரங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, ஓபிஎஸ் தரப்போ மிகுந்த ஆர்வத்தில் உள்ளது.. எடப்பாடி பழனிசாமி கர்நாடக தேர்தலில் போட்டியிட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.. அதாவது, கர்நாடக சட்டசபை தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தால், அந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் தடுப்பதற்கான முயற்சியில் ஓபிஎஸ் டீம் களமிறங்க தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் கமிஷன் என்ன முடிவு எடுக்கும் என்பதுதான் தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.
மூத்த தலைவர்கள்: ஒருவேளை அதிமுக போட்டியிடாமல், தேர்தலை புறக்கணிக்குமானால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க, ஓபிஎஸ் அணி ரெடியாக இருக்கிறதாம்.. ஈரோடு இடைத்தேர்தலில், பாஜக போட்டியிட்டால் தாம் ஒதுங்கி கொள்வதாக அறிவித்தவர் ஓபிஎஸ்.. அத்துடன் வேட்பாளரையும் மனுவை வாபஸ் பெறச்செய்து, பாஜக பக்கம் நின்றவர்.. பாஜகவுக்காக இப்படி தேர்தலில் போட்டியிடாமல், ஒதுங்கி கொள்வது ஓபிஎஸ் போன்ற மூத்த தலைவர்களுக்கெல்லாம் அழகா? என்றுகூட சிலர் விமர்சித்தார்கள்.. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், பாஜகவுக்கான விசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியபடியே உள்ளார் ஓபிஎஸ்.

அந்தவகையில், கர்நாடக தேர்தலிலும் பாஜகவுக்கான ஆதரவை நிச்சயம் வழங்குவார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால், கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு சீட்டைகூட பாஜக தர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.. இது ஒருவகையில் ஓபிஎஸ்ஸூக்கு தற்காலிக நிம்மதி என்றாலும், நாளை தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறதோ? என்கிற முடிவை எதிர்நோக்கி உள்ளதாக தெரிகிறது..
தேர்தல் ஆணையம்: நாளைய தினம் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டிஉள்ளதால், கர்நாடக தேர்தலில் தங்களை கழட்டிவிடும் பாஜகவை பற்றி நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளாராம்.. அத்துடன், பாஜகவுடன் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்தும் அவர்களிடம் கருத்து கேட்க உள்ளாராம்.. எனவே, இந்த விஷயத்திலும் அதிமுக கூடாரத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது ஓபிஎஸ் டீம்.. ஆகமொத்தம் நாளை மிக மிக முக்கியமான நாள் என்பதால், என்னதான் நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
ஓபிஎஸ் நேற்றைய தினம் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது. ஒருங்கிணைப்பாளராக நான் தான் நீடித்து வருகிறேன், கட்சியின் தலைமை பொறுப்பு என்னிடம் தான் உள்ளது, எடப்பாடி தன்னிச்சையாக விதிகளை திருத்தி கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இருக்கிறார் என்று அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார்.. இதனால் தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவைப் பொறுத்து தான் இந்த விவகாரம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை கணிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications