அழகிரியின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது...: கருணாநிதி திட்டவட்டம்

தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது 63வது பிறந்தநாளை நேற்று மிகச் சிறப்பாக கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், " எனது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகச் சிறபாக கொண்டாடப்பட்டுள்ளது. தி.மு.கவில் எனக்கு மீண்டும் முக்கியத்துவம் தருவதாக எந்த தகவலும் வரவில்லை. தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட திமுகவினர் 10 பேரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். கலைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். இந்த 2 விஷயத்தையும் திமுக மேலிடம் ஏற்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. அப்படி செய்தால் சமரசத்துக்கு உடன்படுகிறேன்" என்று கூறியிருந்தார்.
அழகிரியின் கோரிக்கைகள் குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், " கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது அற்பமான புகார்கள் கூறி காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்க கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அப்படி கூறுவதை கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது" என்றார்.
மேலும், தேமுதிகவுடனான கூட்டணி குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், " அது பற்றி எனக்கு எதிவும் தெரியாது" என்று கூறினார்.
திமுகவில் நடப்பது நாடகம் என்ற பிரேமலதாவின் கருத்து குறித்து கேட்டதற்கு, " தி.மு.க.,வில் நடப்பது நாடகமா அல்லது உண்மையா என்பது பிரேமலதாவுக்கு நன்றாகவே தெரியும் " என்று பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications