”தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை நிறுத்த முடியாது” பிரவீன் குமார் திட்டவட்டம்
சென்னை: வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாகனசோதனைகளை தளர்த்த முடியாது என்றும், அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படத்தை மறைக்க போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை அரசு ஸ்மால்பஸ்களில் வரைந்து வைத்துள்ளதாகவும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் கமிஷன் சிறிய பஸ்களில் உள்ள இலைப் படங்களை மறைப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக ஐகோர்ட்டில் கூறியுள்ளது. இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியபோது,"'சிறிய பஸ்களில் உள்ள இலைப்படங்களை மறைப்பதற்கு போக்குவரத்துத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இது சம்பந்தமாக கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்துள்ளோம். தேர்தலுக்காக பறக்கும் படையினர் நடத்தும் சோதனையின்போது, ஆதாரம் இல்லை என்றால் வியாபாரிகளிடம் இருந்து பணத்தை கைப்பற்ற வேண்டியதுள்ளது.
ஆனால் அந்தத் தொகையை உடனே அரசுக் கருவூலத்துக்கு கொடுத்துவிடுவதில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களாக அந்தத் தொகையை எங்களுடன் வைத்திருப்போம். உரிய ஆவணங்களை உதவித் தேர்தல் அதிகாரியிடம் காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். எனவே வாகன சோதனைகளை தளர்த்த முடியாது" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications