இந்தியா முழுவதும் மோடி அலை, தமிழகத்தில் "கேப்டன்" அலை: சொல்வது பிரேமலதா!
கன்னியாகுமரி: நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது.. தமிழகத்தில் கேப்டன் அலை வீசுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முன் திறந்தவேனில் நின்று பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கான கூட்டணி, இளைஞர்களுக்கான கூட்டணி, இளம்சிங்கங்களின் கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கூட்டணி. நிச்சயமாக யார் தயவும் இல்லாமல் 300 இடங்களுக்குமேல் இடங்களைப் பிடித்து இந்த கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும்.
தமிழ்நாட்டில் இந்த தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்ற இந்த கூட்டணி பாடுபடும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். நதிநீரை இணைப்போம். பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுப்போம்.
மீனவர்களுக்கு இனிமேல் எந்த பாதிப்பும் இருக்காது. கச்சத்தீவை மீட்டெடுப்போம். இந்த கூட்டணியை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நதிநீர் இணைப்பைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அறிவிப்பு அரசியலை அவர் மீண்டும் தொடங்கி விட்டார்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் அலை வீசுகிறது. 2 பேரும் சேர்ந்து நல்ல ஆட்சியைத் தரப்போகிறார்கள். மோடி மூலம் இந்தியா வல்லரசு ஆகும். கேப்டன் மூலம் தமிழ்நாடு நல்லரசு ஆகும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications