கரூரில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்து: 4 பேர் பலி
கரூர்: கரூரில் சாலை தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே காக்கவாசி என்ற இடத்தில் சாலையில் அமைந்துள்ள தடுப்புச் சுவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியது. அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தேவி என்ற பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தூத்துக்குடியில் ஒரு திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரின் மேல் வேகமாக மோதியது.

அதில், சரஸ்வதி, செல்வக்குமார், சொர்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேவி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications