சென்னை: மேம்பாலத்தில் சென்ற போது தீப்பிடித்து எரிந்த கார்... தப்பி ஓடிய பெண்கள்
சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ காரில் திடீர் என தீப்பற்றி எரிந்தது. காரில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் ஓரு குழந்தையும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி இன்று ஒரு ஸ்கார்ப்பியோ கார் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 3.30 மணியளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.

அந்த காரில் 5 பெண்களும் ஒரு குழந்தையும் பயணம் செய்து கொண்டிருந்தனர். கார் தீப்பற்றிய உடன் அதிர்ச்சியடைந்த அனைவரும் காரை விட்டு இறங்கி வெளியே ஓடினர். தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
பாலத்தின் மீது தீ எரிவதைப் பார்த்த உடன் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை கட்டுப்படுத்தினர்.

அதிக வெயில் காரணமாக என்ஜீனில் தீப்பற்றியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் தீப்பிடித்து எரிந்த போது எழுந்த புகை மூட்டம் காரணமாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்த காரின் தீயணைக்கப்பட்ட உடன் தற்போது போக்குவரத்து சீராடைந்துள்ளது.
தீ பிடித்து எரிந்த போது டிரைவர் சாமர்த்தியமாக காரை ஓரம் கட்டியதால் காரில் பயணித்த அனைவரும் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications