ஈரோடு அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்
ஈரோடு: ஈரோடு அருகே சாலை விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழரசன், மணிகண்டன் மற்றும் நாமக்கல் மாவட்டம் கூட்டபள்ளியை சேர்ந்தவர் தணிகைவேல். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த பார்த்திபன், அருண்குமார். இவர்கள் ஐந்து பேரும் ஈரோடு மூலப்பாளையத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு நேற்று 5 பேரும் காரில் வந்துள்ளனர். காரை தமிழரசன் ஓட்டி வந்துள்ளார். ஈரோடு அருகேயுள்ள சோலாரில் கார் வந்தபோது. ஈரோட்டில் இருந்து கரூர் சென்ற லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் தமிழரசன், மணிகண்டன் மற்றும் தணிகைவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பார்த்திபன், அருண்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட அப்பகுதியினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ பகுதிக்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுதலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications