தமிழகம் முழுவதும் மழையுடன் வாக்குப் பதிவு... சென்னையில் சாரல்; நெல்லையில் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வரும் நிலையில் மதுரை, திருச்சி, தஞ்சை, திருவையாறு, விருதுநகர், திண்டுக்கல், நாகை, பெரம்பலுார், அரியலுார், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு நேரத்தில் சாரல் மழை பெய்த நிலையில் திருநெல்வேலியில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு, பலத்த மழை பெய்யக்கூடும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். குறிப்பாக, தென்மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நள்ளிரவு 2 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்தது. மதுரை, திருச்சி, தஞ்சை, திருவையாறு, விருதுநகர், திண்டுக்கல், நாகை, பெரம்பலுார், அரியலுார், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலியில் மட்டும் இன்று நெல்லையில் 200 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி உள்ள நிலையில் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்குப் பதிவு சதவீதம் குற்றையுமோ என்ற அச்சமும் உள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications