குயிலி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு
நாகை: நடிகை குயிலி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் கோபால். இவருக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, திருத்துறைப்பூண்டியில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குயிலி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு, நகர் முழுவதும் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் உதவி அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில், நடிகை குயிலி மற்றும் வீடு கட்டும் சங்கத் தலைவர் அன்பரசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி குயிலிக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications