ரூ. 2000 கிடைக்கவில்லை.. ரிசர்வ் வங்கிக்கு எதிரான ஐகோர்ட்டில் வழக்கு.. நவ. 16ல் தீர்ப்பு
ரூ. 2000 கிடைக்காததால் ரிசர்வ் வங்கியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 16ம் அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 2000 நோட்டு கிடைக்காததால் ரிசர்வ் வங்கியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 16ம் தேதி வழங்கப்பட உள்ளது.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் மக்களிடம் பணம் இல்லாத சூழல் உருவானது. மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், தான் கணக்கு வைத்திருக்கும் கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றச் சென்றுள்ளார். அப்போது, வங்கி நிர்வாகம் தங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வராத காரணத்தால் ராமமூர்த்திக்கு பழைய நோட்டை மாற்றித் தர முடியாது என்று கூறியுள்ளது.
இதனையடுத்து, ராமமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் கணக்கு வைத்திருக்கும் கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றபோது, வங்கி நிர்வாகம் சார்பில் ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகள் தருவது இல்லை என்றும், அதனால் நோட்டை மாற்றி தர இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகளை தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மத்திய அரசின் உத்தரவால் சில சங்கடங்கள் ஏற்படும் என்றும் புதிய ரூபாய் நோட்டு பெறுவது தற்காலிமானதுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது தொந்தரவுகளை பொறுத்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
வரும் 16ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி கிருபாகரன், கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications