ஸ்டெர்லைட் வழக்கு நடக்கிறது... விரைவில் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடியில் ஓபிஎஸ் பேட்டி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெறுகிறது, விரைவில் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்...
Recommended Video

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெறுகிறது, விரைவில் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மக்கள் இந்த மோசமான சம்பவம் காரணமாக மத்திய மாநில அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இன்று காலை தூத்துக்குடியில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று இரவே இதற்காக அவர் மதுரைக்கு சென்று இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆனால் பத்திரிக்கையாளர்கள் யாரும் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்த மக்களுக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள். துப்பாக்கி சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக உள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் 2013ல் மூடப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு இதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் ஆலை மூடப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
தூத்துக்குடியில் அமைதி திரும்பி உள்ளது. அரசு யாரையும் தேவையில்லாமல் கைது செய்யவில்லை. இங்கே மிகவும் சாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்பும் அமைதியும் திரும்பியுள்ளது.
காயமடைந்தவர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்.அரசு தன் கடமையை சரியாக செய்து வருகிறது. அம்மா வழியில் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க அரசு மீது எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. மக்கள் ஆதரவு அரசிற்கு இருக்கிறது, என்றுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications