ஆர். கே. நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 15 பேர் அதிரடி கைது.. ரூ.15 லட்சம் பறிமுதல்
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 15 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து வருகின்றன.
இதனால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையால் 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகார்
இதுகுறித்து கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக இதுவரை மொத்தம் 19 புகார் வந்துள்ளது என்றும் அதில் 8 புகார்கள் மீது போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பணம் பறிமுதல்
இந்த புகார்களின் அடைப்படையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. முழு தகவல்கள் கிடைத்த உடன் அதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்திகேயன் தெரிவித்ததுள்ளார்.

இலவச பெட்ரோல்
இதுதவிர ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுகுறித்து தேர்தல் அலுவலர் விசாரணை செய்து வருவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிசிடிவி கேமரா
ஆர். கே. நகர் தொகுதி முழுவதும் வீடியோ கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications