பெரியகுளம் அருகே ஜாதி மோதல்... பரபரப்பு .. எஸ்.பி. தலைமையில் போலீஸ் குவிப்பு!
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கிராமம் வடுகபட்டி. கவிஞர் வைரமுத்துவின் சொந்த ஊர் இது. இந்த ஊரில், அம்பேத்கர் பிறந்த நாள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பேனரை யாரோ சிலர் கழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு சமூகங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு மாவட்ட எஸ்.பி மகேஷ் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications