காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்க கூடாது: ஸ்டாலின்
சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவிரி நீர் பிரச்சனை மற்றும் சேலம் 8 வழிச்சாலை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

காவிரி நீர் பிரச்சனை குறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இது குறித்து ஸ்டாலினிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
அதிக அதிகாரம் இல்லாத ஒரு ஆணையத்தை அமைத்துள்ள போதிலும் அதை தவறு என்று கூறி கர்நாடக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்கிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனால் மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது.
காலத்தை கடத்தவே கர்நாடகா இந்த நாடகத்தை நடத்துகிறது. அதனால் தமிழக அரசு உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு நல்ல முடிவை எடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இது குறித்து எங்கள் கட்சியின் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்டசபையில் பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆணைய கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்த்து பிறகு கூட்டத்தை கூட்டலாம் என்றார் என ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மக்கள் விரும்பியே நிலத்தை அளிக்கிறார்கள் என்று முதல்வர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு ஸ்டாலின் கூறியதாவது,
அவதிக்குள்ளாகி போராடிக் கொண்டிருக்கிறார்களே, அந்த விவசாய பெருங்குடி மக்கள், பொதுமக்களை சந்தித்து இந்த வார்த்தையை கூறினார் என்றால் அவர் பேச்சை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். இதை பிற கட்சிகள் பெரிதாக்கி மக்களை திசை திருப்புவதாக கூறப்படுகிறதே என்று ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமை. மாநில அரசு அடிமையாக இல்லாமல் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications