காவிரி விவகாரம்: ஆக. 25-ல் தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு
சென்னை: காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 25ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் சங்கடத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளின் விவசாயப் பிரிவுகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், காவிரி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் வரும் 25ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதேநாளில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications