காவிரி மேலாண்மை வாரியம் கோரி ரயில் மறியல்: தண்டவாளத்தில் இறங்கி போராடிய ஸ்டாலின் கைதாகி விடுதலை
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தடையை மீறி தண்டவாளத்தில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஓட்டேரியில் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறுகிறழ, கிராமம் கிராமமாக தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்வதால் ரயில் சேவை இரண்டு நாள் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. கிராமம் கிராமமாக தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்வதால் ரயில் சேவை இரண்டு நாள் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
|
48 மணிநேரம் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 17, 18 ஆகிய நாட்களில் 48 மணி நேர தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மமக, திக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அனைத்து விவசாயிகள், வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

200 இடங்களில் மறியல்
48 மணி நேர ரயில் மறியல் போராட்டம் இன்று காலையில் தொடங்கியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிகர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, கிராமம் கிராமமாக சுமார் 200 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுகவினர் மறியல்
சென்னையில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டை தேரடி ரயில் நிலையத்திலும், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
|
பெரம்பூரில் ஸ்டாலின் பேரணி
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பெரம்பூரில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். திமுக கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்ற திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். முடியட்டும்... விடியட்டும் என்றும் அப்போது அவர்கள் முழக்கமிட்டனர்.
|
புறநகர் ரயில் மறிப்பு
திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திமுகவினரை ரயில் நிலையத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி 4வது பிளாட்பாரத்திற்குள் நுழைந்த மு.க.ஸ்டாலின், தண்டவாளத்தில் இறங்கினார். அவருடன் ஏராளமான திமுகவினரும் தண்டவாளத்தில் திமுக கொடியை ஏந்தியவாறு சென்றனர். அப்போது ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயிலை மறித்து திமுகவினர் முழக்கமிட்டனர்.

ஸ்டாலின் கைதாகி விடுதலை
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து செல்வதாகவும், கைதாவதாகவும் கூறினர். இதனையடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் பேருந்துகள் மூலம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தினால் 15 நிமிடம் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications