மேட்டூரில் 1 லட்சம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூரில் இன்று 1 லட்சம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி: மேட்டூரில் இன்று 1 லட்சம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 19ம் தேதியே மேட்டூரில் இருந்து விவசாய பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டூர் அணை நிரப்பி இருக்கிறது.

இந்த தண்ணீர் வரத்து காரணமாக கல்லனையும் நிறைந்து இருக்கிறது. இதனால் கல்லணையும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.கல்லணையில் இருந்து விநாடிக்கு 25000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இன்று 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேட்டூருக்கு நொடிக்கு 72456 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.கர்நாடகா மழையால் இன்று நீர்வரத்து அதிகமாகும்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.4 அடியை தாண்டியது. தற்போது நீர் இருப்பு - 94.11 டி.எம்.சியாக உள்ளது.












Click it and Unblock the Notifications