காவிரி: முதல் முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. எம்.பி.க்கள் இணைந்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!
டெல்லி: தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயமாக காவிரி நதிநீர் பிரச்சனைக்காக "எதிரி கட்சிகளான" அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இந்த தீர்மானத்தை பிரதமரிடம் கொடுத்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க.வின் லோக்சபா (37) மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் (11) , தி.மு.க.வின் கனிமொழி, திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, இடதுசாரி கட்சிகளின் டி.ராஜா, ரங்கராஜன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசி மணலில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இது தொடர்பாக நிறைவேற்ற தீர்மான விவரத்தையும் பிரதமர் மோடியிடம் தமிழக எம்.பி.க்கள் வழங்கினர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications