ராமஜெயம் கொலை வழக்கு – விசாரணை அறிக்கை இன்று தாக்கல்.. சிபிஐ விசாரணை வருமா?
மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அறிக்கையை இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்கின்றனர்.
திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
ராமஜெயம் அதிகாலை வாக்கிங் சென்ற போது அவரை கடத்திய கும்பல் சித்ரவதை செய்து கொன்று திருச்சி - கல்லணை ரோட்டில் திருவளர்சோலை என்ற இடத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.

ராமஜெயத்தை கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து திருச்சி சி.பி.சி. ஐ.டி போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அரசியல் போட்டி, கிரானைட், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி, முன் பகை உள்பட பல காரணங்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், ரவுடிகள் என பலரிடம் விசாரணை நடந்தது.
ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட நாளன்று அவரது வீட்டின் சுற்றுப்பகுதி, அவர் வாக்கிங் சென்ற பகுதி, அவரது பிணம் கிடந்த பகுதி ஆகிய இடங்களில் பயன்பாட்டில் இருந்த செல்போன்கள் மூலம் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது. அதே போன்று ராமஜெயம் செல்போனுக்கு அதிக முறை தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் பட்டியல் தயாரித்தும் விசாரணை நடந்தது.
ஆனால் 3 வருடங்கள் ஆகியும் வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு துலங்க வில்லை. இதனால் ராமஜெயத்தின் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். ராம ஜெயத்தின் மனைவி லதா தனது கணவர் கொலை வழக்கு விசாரணையை சி.பி. ஐக்கு மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கடந்த மாதம் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா கடந்த 3 வருடங்களில் ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணை குறித்த தகவல்கள் திரட்டிய ஆதாரங்கள், விசாரணை நிலவரம் ஆகியவற்றை ஜனவரி 9 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சி.பி.சி. ஐ.டி போலீசார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ராமஜெயம் கொலை குறித்து இதுவரை நடத்திய விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள், வழக்கு முன்னேற்றங்கள், விசாரித்த நபர்கள், திரட்டிய ஆதாரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்கிறார்கள்.
அதோடு இவ்வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.யே விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கோரிக்கையும் வைக்க உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications