உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் பலாத்காரம்.. எஸ்.ஐ. உட்பட 3 போலீசாரை கைது செய்தது சி.பி.ஐ.!!
திருப்பூர்: உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சந்திரா என்ற பெண் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஐ. விஜயகுமார் உட்பட 3 போலீசாரை சி.பி.ஐ. அதிரடியாக நேற்று இரவு கைது செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சந்திரா. அவரது வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந் தேதி அவர் உடுமலைப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில போலீசாரால் மிகக் கொடூரமாக சந்திரா சித்ரவதை செய்யப்பட்டு மிக மோசமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சந்திராவின் மகள் ராஜகுமாரி, இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சந்திரா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. ஆனால் ஓராண்டாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமலேயே இருந்து வந்தது.
அண்மையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதாவும், ஓராண்டாகியும் உடுமலைப்பேட்டை சந்திரா வழக்கில் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் சி.பி.ஐ. போலீசார் நேற்று 10 போலீஸ் அதிகாரிகளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கான்ஸ்டபிள்கள் திலக்குமார், ரங்கநாயகம் ஆகியோரை நேற்று இரவு சி.பி.ஐ. சிறப்பு கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இன்று இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications