சென்னை ஏர்போர்ட்டில் குவியும் கடத்தல் தங்கம்.. கஸ்டம்ஸிடம் கணக்கு கேட்டு சிபிஐ ரெய்டு
சென்னை: சென்னை விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்தில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்டு பிடிபடும் தங்கம் குறித்த கணக்கு சரியாக இல்லை என்று வந்த புகாரைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
தங்கம் உள்ளிட்டவற்றின் கடத்தலைத் தடுக்க தடுக்க சென்னை விமான நிலையத்தில் தினமும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருகை தருபவர்களில் பலர், பல்வேறு வழிகளில் நூதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காலணிகள், சூட்கேசுகளில் மறைத்து வைத்தும், தங்கத்தை கடத்தி வருகிறார்கள். கடத்தல் தொழிலில் கைதேர்ந்த சிலர், அதனை பாலீத்தின் கவர்களில் சுற்றி வாய்க்குள் போட்டு விழுங்கியும் பல நேரங்களில் கடத்தி வந்துள்ளனர்.

தொழிலாய் மாறிய கடத்தல்:
இதுபோன்ற தங்க கடத்தலை தொழில் போலவே மேற்கொண்டு வருகிறார்கள். இப்படி கடத்தி வரப்படும் தங்கத்தால், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் பம்பரமாய் சுழன்று பணி செய்து வருகிறார்கள்.

கோடிக்கணக்கான ரூபாய்:
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும், அவர்களின் உடைமைகளையும், கடுமையாக சோதனை செய்யும் அதிகாரிகள், அடிக்கடி கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இப்படி மீட்கப்படும் கடத்தல் தங்கம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து வந்துள்ளனர்.

முறையான கணக்கில்லை:
இப்படி விமான நிலையத்தில் பிடிபடும் தங்கத்துக்கு சுங்கத்துறை அதிகாரிகள் முறையாக கணக்கு காட்டுவதில்லை என்றும், தங்கத்துக்கான வரியை விதிப்பதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன.

சிபிஐ அதிரடி சோதனை:
இதை தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள், சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த திட்டமிட்டனர். இதன்படி நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், 4 ஜீப்களில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மாலையில் அறிவிக்கப்படும்:
அப்போது ஒவ்வொரு மாதமும் பிடிபடும் கடத்தல் தங்கத்தின் அளவு எவ்வளவு? என்று கேட்டறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதற்கான கணக்குகளையும் சரிபார்த்தனர். இன்று காலை 7 மணி வரையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது சேகரிக்கப்பட்ட விவரங்கள் என்ன? என்பது பற்றி தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இதுபற்றிய விரிவான தகவல்களை அவர்கள் இன்று மாலையில் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications