ஃப்ரைட் ரைஸ் தராத மாஸ்டருக்கு கட்டையால் அடி... பகீர் சிசிடிவி காட்சிகள்
தென்காசி: தென்காசி அருகே ஃப்ரைட் ரைஸ் தராத ஆத்திரத்தில் ஹோட்டல் மாஸ்டரை குடிபோதை இளைஞர் ஒருவர் கட்டையால் தலையில் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை என்ற இடத்தில் உணவகம் ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஃப்ரைட் ரைஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ஆறுமுகம் பணியில் இருந்த போது அங்கு குடிபோதையில் வந்த வினோத்குமார் என்ற இளைஞர் தனக்கு சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அப்போது ஆறுமுகம் பணம் கேட்கவே தன்னிடம் பணம் இல்லையென்றும் பிறகு தருவதாகவும் கூறியுள்ளார். பணம் இல்லையென்றால் உணவு தர முடியாது என ஆறுமுகம் கூறியதையடுத்து ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்ததையடுத்து வினோத்குமார் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து ஆறுமுகம் மீண்டும் பணியில் இருந்தபோது, சிறிது நேரத்தில் மீண்டும் கையில் கட்டையுடன் வந்த வினோத்குமார், பின்புறமாக ஆறுமுகத்தின் தலையில் கட்டையால் கொடூரமாகத் தாக்கினார். இதில் நிலைதடுமாறி ஆறுமுகம் கீழே விழ, வினோத்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த கொடூர தாக்குதல் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.பலத்த காயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர்.
ஃப்ரைட் ரைஸ் தராத ஆத்திரத்தில் ஹோட்டல் மாஸ்டரை குடிபோதை இளைஞர் கட்டையால் தலையில் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications