முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: வேளாண் தலைமைப் பொறியாளர் ஜாமீன் கோருகிறார்
நெல்லை: வேளாண் உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் கோரி நெல்லை கோர்ட்டில் மனு செய்துள்ளார். அவரது மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி (57) ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்மூர்த்தி, தலைமைப் பொறியாளர் மு.செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மு.செந்தில் சார்பில் ஜாமீன் கேட்டு, திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வேளாண்மை துறையின் மிகவும் மதிப்பு மிக்க பொறுப்பில், நேர்மையுடன் பணியாற்றி வரும் எனக்கும், இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எனக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளன. இவற்றை பரிசீலித்து எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பொறியாளர் செந்தில் கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications