நாயை தூக்கி வீசியதைப் போல அவர்களையும் எறிய வேண்டும்... பாடகர் கிருஷ் ஆவேசம்
சென்னை: சென்னை அருகே இரு மருத்துவ மாணவர்கள், நாய் ஒன்றை மாடியிலிருந்து தூக்கி வீசிய செயல் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாடகரும், நடிகை சங்கீதாவின் கணவருமான கிருஷ், நாயைத் தூக்கி வீசியதைப் போல இவர்களையும் வீச வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் கவுதம் சுதர்சன். இதேபோல நெல்லையைச் சேர்ந்துவர் ஆஷிஷ் பால். இவர்கள் இருவரும் கீழ்க்கட்டளை பகுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் ஒரு நாயை 3வது மாடியிலிருந்து தூக்கி வீசி அதை வீடியோவிலும் படமாக்கியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று இருவரையும் அவர்களது பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த விவாகரம் குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதோ அவற்றில் சில...
|
அவர்களையும் தூக்கி எறிய வேண்டும்: கிருஷ்
பாடகர் கிருஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில் எப்படியும் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஒரே வழிதான் உள்ளது. அவர்களையும் இதேபோல தூக்கி எறிய வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
|
போலீஸுக்கு நன்றி - சின்மயி:
பாடகி சின்மயி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், போலீஸார் வேகமாக செயல்பட்டுள்ளனர். சென்னை போலீஸுக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
|
டாக்டராகக் கூடாது- திரிஷா:
நடிகை திரிஷா போட்டுள்ள டிவிட்டில், இந்த இருவரும் டாக்டராகப் பணியாற்ற அனுமதிக்கப்படக் கூடாது. இதுதொடர்பான நடவடிக்கையைக உரியவர்கள் எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
|
150 சவுக்கடி- குஷ்பு:
நடிகை குஷ்பு போட்டுள்ள டிவிட்டில் இன்னொருவரின் டிவிட்டை ரீட்வீட் செய்து 150 சவுக்கடி தரலாமா என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications