எங்கே போகுது உலகம்.. கர்ப்பிணிகள் ஆடையில்லாமல் போஸ் கொடுப்பதுதான் பேஷனா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஹாலிவுட் பட நடிகைகளுக்கு இணையாக பாலிவுட் பட நடிகைகள், மாடல்கள், பிரபலங்கள் நீச்சல் உடை அணிந்துக் கொண்டும், டாப்லெஸ்ஸாகவும் படம் எடுத்து வெளியிடுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.

தொழில்நுட்பத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால் மக்கள் எதற்கெல்லாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்ற விவஸ்தை இல்லாமல் போச்சு. பாம்பு படம் எடுத்த போது, யானை துரத்தும் போது, சிங்கங்கள் கடக்கும் போது, ஆற்றில் குளிக்கும் போது என்று செல்பியும், போட்டோக்களையும் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பினால் மட்டும் சிலருக்கு தூக்கம் வரும்.

அதற்காக இப்படியா. இங்கு இரு பிரபலங்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் ஒரு புனிதமான விஷயத்தை ஒருவர் ஒட்டு துணியில்லாமலும், மற்றொருவர் பிகினியிலும் போஸ் கொடுத்துள்ளார். அவர்கள் வேறு யாருமில்லை ஒருவர் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றொருவர் பாலிவுட் நடிகை செலினா ஜேட்லி.

 டென்னிஸ் வீராங்கனை

டென்னிஸ் வீராங்கனை

கடந்த சில மாதங்களுக்கு முன் டென்னீஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது கர்ப்பத்தை அரைகுறை ஆடையோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை சமூக வலைதளங்களில் தெரிவித்தார். இன்னும் நேற்று ஒரு படி மேலே போய் ஒரு புத்தகத்தின் அட்டை படத்துக்கு உடம்பில் ஒட்டு துணியில்லாமல் அவர் போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அதிகரிப்பு

அதிகரிப்பு

இந்தி பட உலகில் நீச்சல் உடை அணிந்து அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது அவர்களைவிட ஒரு படி மேலே போய் கர்ப்பமாக இருக்கும் வயிறை ரசிகர்களிடம் காட்டுவதற்காக ஒரு இந்தி நடிகை டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து அந்த கோலத்தை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் பெயர் செலினா ஜேட்லி.

 இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அக்டோபரில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கணித்து கொடுத்துள்ளனர். கரீனா கபூர் கான், லிசா ஹேடன் உள்ளிட்ட தாங்கள் தாய்மை அடைவதை நினைத்து பூரித்ததை போல் தற்போது செலினாவும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

 4 குழந்தைகள்

4 குழந்தைகள்

இரட்டை குழந்தை பிறப்பது இவருக்கு இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. இருவரும் மகன்கள். 5 வயதான அவர்களுக்கு வின்ஸ்டன் மற்றும் வீராஜ் என பெயரிட்டுள்ளார். தற்போது பிறக்கவுள்ள குழந்தைகளையும் சேர்த்தால் அவருக்கு 4 குழந்தைகளாகும்.

சமூக வலைதளங்களில்..

இதுபோன்ற புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் செலினாவுக்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர வருகிறது. கர்ப்பமாக இருக்கும் படத்தை பிகினியில் யாராவது வெளிப்படுத்துவார்களா என்றும் புனிதமான தாய்மையை இப்படி கொச்சைப்படுத்தும் வகையில் இப்படி விளம்பரப்படுத்துவதா என்றும் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

 கலாசாரம் என்றாலும்...

கலாசாரம் என்றாலும்...

இது வெளிநாட்டினரின் கலாசாரம் என்றாலும் அதை சமூக வலைதளங்களில் போடுவதால் என்ன பயன்? 4 பேர் வாய்க்கு வந்தபடி பேசுவதும், கைகொட்டி சிரிப்பதும்தான் விஞ்சும். பிரபலங்கள் தங்களது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர இதுபோல் இருக்கக் கூடாது. இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Familiars like serena willams and celena jaitley exposed their pregnant in two different ways.
Please Wait while comments are loading...