சென்னை சிறையில் 'அல் உம்மா' தீவிரவாதியிடம் இருந்து செல்போன் பறிமுதல்
சென்னை: சென்னை புழல் சிறையில் அல் உம்மா தீவிரவாதி தெளசிக்கிடம் இருந்து செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புழல் சிறையில் அல் உம்மா தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள ப்ளாக்கில் புதன்கிழமையன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கழிவறையில் செல்போனில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அவர் வெளியே செல்போனுடன் வந்தபோது சிறை அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனில் பேசிக் கொண்டிருந்தது அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த தெளசிக் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு கொடுங்கையூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் தெளசிக். தற்போது அவர் சிறையில் இருந்தபடியே யார் யாருக்கு போனில் பேசினார் என்ற விவரத்தை போலீசார் திரட்டி வருகின்றனர். அத்துடன் தெளசிக்குக்கு செல்போன் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications