தொடர்ந்து கலகலக்கும் மதிமுக... மத்திய சென்னை மா.செ. அம்பிகாபதி கட்சியில் இருந்து விலகல்
சென்னை: மதிமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ரெட்சன் அம்பிகாபதி அக்கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலர் வைகோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதற்கு மதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதிமுக மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தனர்.

சென்னையைப் பொறுத்தவரையில் தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், மத்திய சென்னை ரெட்சன் அம்பிகாபதி போன்றோர் மதிமுகவுக்கு தூண்களாக இருந்தவர்கள். இதில் வேளச்சேரி மணிமாறன் தேர்தலுக்கு முன்பே வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கிவிட்டார். பின்னர் திமுகவில் இணைந்தார்.
தற்போது மத்திய சென்னை மதிமுக மாவட்ட செயலாளரான ரெட்சன் அம்பிகாபதியும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டார். அம்பிகாபதி கடந்த சில நாட்களாக கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
தற்போது தாம் கட்சியில் இருந்து வெளியேறுவதாக வைகோவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அம்பிகாபதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications