6 வாரம் அமைதியாக இருந்து விட்டு கடைசி நேரம் வரை காக்க வைத்து கழுத்தறுத்தது மத்திய அரசு
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் 6 வாரமாக எந்த ஒரு முயற்சியையும் செய்யாத மத்திய அரசு கடைசி நேரம் வரை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இத்தனை வாரங்களாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி வரையோடு கெடு முடிவடைந்துவிட்டது. இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழக அரசை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.
6 வாரங்கள் அமைதியாகவே இருந்த மத்திய அரசு இடையில் கண்துடைப்புகாக ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டியது. மேலும் ஸ்கீம் என்றால் வாரியமா அல்லது குழுவா என்று சந்தேகத்தை தீர்த்து கொள்ள உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளிவந்தன.
இதுபோல் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை பகைத்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே கடைசி நிமிடம் வரை மத்திய அரசு காலம் தாழ்த்தி கொண்டே சென்றது. தற்போது வரை எதையும் அறிவிக்காமல் தமிழக மக்களையும் சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் அவமதித்துவிட்டது.
இது முழுக்க முழுக்க தமிழக அரசை நம்ப வைத்து முதுகில் குத்திய செயலாகவே கருதப்படுகிறது. இன்று வரை மத்திய பாஜகவை விட்டு கொடுக்காமலேயே தமிழக பாஜக பேசி வந்தது. இந்நிலையில் தமிழர்களின் நெற்றியில் நன்று குழைக்கப்பட்ட பட்டை நாமத்தை மத்திய அரசு போட்டு விட்டது.












Click it and Unblock the Notifications