விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டது கண்ணீர் வரவைத்து விட்டது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் உருக்கம்
விவசாயிகளின் பிரச்சனையை கேட்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை ஈவிகேஎஸ்.இளங்கோவன் சாடியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் விவசாயிகளின் பிரச்சனையை கேட்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை ஈவிகேஎஸ்.இளங்கோவன் சாடியுள்ளார். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டது கண்ணீர் வரவைத்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் இன்று 30வது நாளாக நீடிக்கிறது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

வேதனை அளிக்கிறது
அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். மேலும் 30 நாளாக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.

கண்ணீர் வரவழைத்துவிட்டது
விவசாயிகளுக்கு எதிராக எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்று கூறிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டது கண்ணீர் வரவைத்து விட்டது என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு கண்டனம்
விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை?
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்கக்கூட மத்திய அரசுக்கு நேரமில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications