அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தியை கட்டாயமாக்குவது ஏன் : அன்புமணி
அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தியை கட்டாயமாக்குவது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தி கட்டாயம் என்பது, இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிய இந்தி கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிப்படை இந்தி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போபால் தவிர இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்கள் ஆகும். அங்கு பணியாற்ற இந்தி மொழி அறிவு தேவையில்லை எனும் போது இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக மத்திய அரசு அறிவிப்பது எந்த வகையில் நியாயம் ?
எந்த வகையிலும் பணிக்கும், மக்களுடன் தொடர்பு கொள்ளவும் தேவைப்படாத இந்தி மொழியை கட்டாயமாக்குவது பின்னணியில் தான் மிகப்பெரிய சதி உள்ளது. அடுத்தக்கட்டமாக ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். மத்தியப் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் இந்தியை நாடு முழுவதும் பரப்பலாம் என்பது தான் இதன் பின்னணியிலுள்ள திட்டமாகும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது. கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிப்பை வெளியிடப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications